நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, பாலிவுட் வரை சென்றுவிட்டார்.
இந்த நிலையில், ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை முதல் முறையாக கீர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அட ஆமாங்க… நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குழந்தை பருவ காதலரான ஆண்டனி உடனான உறவை உறுதிப்படுத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டு, “15 வருடங்கள், அது எப்போதுமே.. “AntoNY & KEerthy ( lykyk)” என்ற அவரது பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
அடுத்த மாதம் (டிசம்பர்) கேரளாவில் நடக்கும் பாரம்பரிய திருமண விழாவில் கீர்த்தி ஆண்டனியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முந்தைய பிரம்மாண்டமான விழா கோவாவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கீர்த்தியின் திருமண தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அது குறித்து அறிவிப்பை அவரே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.