• About Us
  • Add News
  • Contact Us
Thursday, July 17, 2025
  • Login
Muthalkural News
MIS Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • மருத்துவம்
    • பாடசாலை செய்திகள்
  • சினிமா
  • ஏனையவை
    • அமைப்புகள்
    • அறிக்கைகள்
    • எம்மவர் படைப்பு
    • எழுத்தாளர்கள்
    • கட்டுரைகள்
    • கழகங்கள்
    • காணொளிகள்
    • சமையல்கள்
    • சிறுகதை
    • சுற்றுலா
    • தொழில்
    • பரிகாரத் தலங்கள்
    • ஜோதிடம்
    • விவசாயம்
    • வேலை வாய்ப்புக்கள்
  • கோயில்கள்
  • கல்வி
    • நூலகம்
    • பாடசாலைகள்
    • பாடசாலை செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
No Result
View All Result
Muthalkural News
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை (2024-11-21) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.

by Muthal Kural
November 22, 2024
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், சிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள்
0 0
0
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை (2024-11-21) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் அது முக்கியமானது. எமது நாட்டின் தேர்தல் முறையில் அதிகளவான எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு என அனைத்து மாகாணங்களும் மக்களும் அதற்கு பங்களிப்பு செய்துள்ளன.

இனவாதத்திற்கு இடமளிக்கப்படாது

இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் இடையே பிரிவினை,சந்தேகம், இனவாதம் என்பன வலுவடைந்தன. ஒரு தரப்பில் இனவாதம் வலுவடையும் வேளையில் அதற்கு எதிராக மாற்றுத் தரப்பிலும் இனவாதம் வலுப்பெரும். இனவாதம் ஒரே இடத்தில் இருக்காது. அது பற்றிய வரலாற்றை எமது நாட்டிலும் அரசியலும் சமூகத்திலும் பார்ததிருக்கிறோம். ஆனால் அனைத்து இன மக்களும் எம்மை நம்பிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எம்மை நம்பாமல் ஏனைய கட்சிகளை நம்பும் மக்கள் உள்ளனர். அது ஜனநாயகம் ஆகும். தனியொரு கட்சியை சூழ்ந்து மக்கள் செயற்பாடுகளை உருவாக்குவது ஜனநாயகமான அமையாது.

பல்கட்சி முறையை பலப்படுத்துவோம்

பல நிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகளின் இருப்புதான் ஜனநாயகமாகும். அதேபோல் பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் குழுக்களின் இருப்பும் ஜனநாயகமாகவே அமையும். எனவே ஜனநாயக ஆட்சி என்ற வகையில் பல கட்சி அரசியலை நாம் வெறுப்பதில்லை. கொள்கை ரீதியாக அதனை ஆதரிப்போம். எமக்கு வாக்களித்த, வாக்களிக்கான அனைத்து மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்ய கடமையைப் பட்டிருக்கிறோம். தேர்தலால் மக்களுக்கும் எமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. தேர்தல் காலத்தில் நாம் எமது கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறோம் அதன் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் எமக்கு வாக்களிகின்றனர். எனவே அந்த பிணைப்பில் மக்கள் தமது பங்கை செய்துவிட்டனர். பங்குக்கு எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். தற்போது நாம் எமது பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.

எனவே நானும் எமது அரசாங்கமும் மக்கள் நம்பிக்கை எவ்வகையிலும் சிதைந்துபோக இடமளியாமல்,இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல கடமைப் பட்டிருக்கிறோம். அதற்கு நாம் பொறுப்புக்கூறுவோம். பிரதேசம், கலாசார அடிப்படையில் மாற்றங்கள் இருந்தாலும் வெவ்வேறு மொழிகளை பேசினாலும் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை காண்பித்திருக்கிறோம்.

தேசிய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படும்

எனவே எமது நாட்டு மக்கள் நீண்ட கால கனவாக காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பை கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகவும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. இன்று இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் எமது எதிர்கால சந்ததிக்கு அவ்வாறான நாட்டை கையளிக்க கூடாது என்ற பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் செய்ய பல போராட்ட வடிவங்கள் இருக்கலாம்.

பொருளாதாரம்,ஜனநாயகம், என்று பல வகையில் இருக்கலாம். ஆனால் இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்.

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மீள ஏற்படுத்துவோம்

இந்த மக்கள் ஆணையில் மற்றுமொரு எதிர்பார்ப்பு மறைந்திருந்தது. நாட்டில் நீண்டகாலமாக காணப்பட்ட முறையற்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தெரிவான நான் 24 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினேன். 24 வருடங்களும் இந்த பாராளுமன்றம் மக்கள் வெறுப்பை தேடிக்கொண்ட காட்சிகளை கண்ணால் கண்டிருக்கிறேன். பாராளுமன்றம் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததை பார்த்திருக்கிறோம். சபைக்குள்ளும் சபைக்கு வௌியில் உள்ள மக்கள் மத்தியிலும் இந்த உயர் சபை தொடர்பிலான நம்பிக்கை படிப்படியாக அற்றுப் போனது. உயர்வான ஒரு சபையில் இருந்துகொண்டு மக்களை புறக்கணிக்கும்,மக்கள் வெறுப்பை தூண்டும், மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறானதொரு பாராளுமன்றம் இந்த நாட்டை ஆள்வதற்கு பொருத்தமானதாக அமையுமென நான் நம்பவில்லை. நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் பொருத்தமானது அல்ல. இனியும் மக்களின் நிதி அதிகாரத்தை கையாள்வதற்கு அந்த பாராளுமன்றம் பொருத்தமற்றது. மக்கள் நிதியை கையாளும் அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது. மக்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

எனவே, தொடர்ந்தும் மக்களிடம் இருந்து தூரமான பாராளுமன்றமாக இருக்க முடியாது. இந்தப் பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தின் மீயுர்வை பாதுகாக்க வேண்டும். இந்தப் பாராளுமன்றம் பெருமளவான புதிய பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைந்துள்ளது. அவர்களுக்கு நல்ல பழக்கங்களை துரிதமாக வழங்கக் கூடிய பாராளுமன்றம் இது. புதிய

சபாநாயகரும் பணிக்குழாமும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் இந்த பாராளுமன்றத்தை மீளக்கட்டமைக்க ஒத்துழைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் தொடர்ந்தும் மக்களுக்கு மறைவான குகையாக இருக்கக் கூடாது.இந்தப் பாராளுமன்றத்தில் போதுமான நவீன தொழில்நுட்ப முன்னேற்த்திற்கு அமைய நாளாந்தம் நடக்கும் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக இருக்கும். மக்களுக்கு மறைவான நிலையமாக இந்தப் பாராளுமன்றம் இருக்காது.

மக்களுக்கு வெளிப்படையான நிலையமாக மாற்ற நாம் தொடர்ந்தும் முயன்று வருகிறோம். நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாயின் நாம் பேசும் விடயம்,நடத்தை,வெளியிடும் கருத்து என அனைத்தும் மக்கள் முன்னிலையில் ஆராயப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தான் இறுதிமுடிவு என நான் யாராவது நினைப்பதாக இருந்தால் அது இறுதியானதல்ல. அடுத்த அதிகார பரிமாற்றம் வரை மற்றும் அடுத்த மக்கள் ஆணை உரசிப்பார்க்கப்படும் வரை எம்மை பரீட்சித்துப் பார்க்கும் அதிகாரம் மக்களுக்குள்ளது. இந்த பாராளுமன்றம் எதிர்வரும் சில வருடங்களில் மக்களின் பரிசோதனையில் சித்தியடைந்த பாராளுமன்றமாகும் என கருதுகிறேன். அதற்கு சபாநாயகரினதும் எம்.பிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும்.

இலங்கை வரலாற்றில் அரச ஊழியர்கள் அதிகமாக அரசாங்கத்திற்கு வாக்களித்த தேர்தல் என்பதை இந்த மக்கள்ஆணையில் நாம் காண்கிறோம். எமது அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல மனப்பாங்கு கிடையாது. அரச சேவை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சில பாதகமாக எண்ணங்கள் காணப்படுகிறது. அரச சேவையில் இருப்போருக்கு தமது பணி தொடர்பிலும் திருப்தி கிடையாது. அதனால் மக்களை திருப்திப்படுத்தாத அரச சேவையும் சேவையில் ஈடுபட்டுள்ளோர் திருப்தி அடையாத அரச சேவையும் தான் எம்மத்தியில் எஞ்சியுள்ளது. அதனால் இரு தரப்பிலும் திருப்தியான அரச சேவையை உருவாக்குவது எமது முழுமையான பொறுப்பாகும்.

இந்த மக்கள் ஆணையின் போது சிறந்த அரச சேவைக்காக எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான அவர்களின் பக்கசார்பை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எமக்கு பலமான அரச சேவையின்றி முன்னோக்கிச் செல்ல முடியும் என்று நாம் கருதவில்லை.உலகில் அனைத்து நாடுகளும் புதிய திருப்புமுனையின் போதும் அரசியல் தலைமையின் வழிகாட்டலைப் போன்றே அரச துறையின் செயற்பாடும் முக்கியமானதாகிறது.

அரசியல் கட்சிகளுக்கு எத்தகைய எதிர்பார்ப்புகள் இலக்குகள் இருந்தாலும் அதற்கு உகந்த அரச சேவையொன்றை உருவாக்க முடிந்தால் மாத்திரமே அவற்றை சாத்தியமாக்க முடியும். அதனால் செயற்திறனான மக்களின் விருப்புக்கேற்ற அரச சேவை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம்.அதற்கு அரச சேவையில் இருந்தே பாரிய மக்கள் ஆணை கிடைத்துள்ளது.அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

ஜனநாயக அரசை உருவாக்குவோம்

விசேடமாக ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பில் நோக்கினால் அனைத்து பிரஜைகளுக்கும் தாம் பின்பற்றும் மதம்,மொழி மற்றும் கலாசாரத்திற்கு அமைய தனிமைப்படத் தேவையில்லை. தாம் பின்பற்றும் மதம் தனக்கு மேலதிக அழுத்தத்தைத் கொடுப்பதாக எண்ணத் தேவையில்லை. தமது கலாசாரம் தனக்கு மேலதிக அழுத்தம் தருவாதக நினைக்கத் தேவையில்லை. தாம் ஆதரிக்கும் அரசியல் மேலதிக அழுத்தம் கொடுப்பதாக கருதத் தேவையில்லை. அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஒவ்வொரு இனக் குழுக்களுக்குமிடையில் தமக்கென தனித்துவங்கள் இருக்கலாம். ஆனால் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே அச்சமோ சந்தேகமோ இன்றி ஜனநாயக நாடொன்றை உருவாக்குவது எமது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்

அந்தப் பொறுப்பில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது பிரதானமானதாகும். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதென்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களின் ஊடாக மாத்திரமல்ல. இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு சமயங்களில் நீண்ட கலந்துரையாடல்கள்,தொடர்ச்சியான விவாதங்களின் ஊடாக முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். சட்டங்களை நிறைவேற்றுவது மாத்திரம் போதுமானதல்ல.அவற்றை உரிய வகையில் அமுல்படுத்த வேண்டும்.

அதே போன்று சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். கடந்த காலங்களில் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கை தகர்ந்துள்ளது. தமக்கு ஏதாவது அநீதி நடந்தால் சட்டத்தின் முன்பாக சென்று நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தமக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் அந்த அநீதிக்காக சட்டத்தின் ஆதரவை பெற முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுக்கள் மத்தியில் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலான நம்பிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தாமல் நல்லாட்சியொன்றை கட்டியெழுப்ப முடியும் என்று நாம் கருதவில்லை. சிறந்த ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு சட்டத்தின் ஆட்சி அதில் பிரதான அம்சமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

நாம் அரசு என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் சட்டத்திற்கு உட்பட்டுள்ளன. எந்தவொரு அரசியல்வாதியோ அதிகாரம் உள்ள எவருமோ இனிமேல் சட்டத்தை விட உயர்வாக இருக்கமாட்டார். அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். அதே போன்று சட்டம் மீதான மக்களின் வீழ்ச்சியடைந்த நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில் எவரிடமும் பலிவாங்கவோ துரத்திச் சென்று வேட்டையாடும் நோக்கமோ எமக்குக் கிடையாது. அனைவரினதும் அரசியல் செய்யும் சுதந்திரத்தை உறுதி செய்வோம்.

பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்

ஆனால் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பல குற்றச் செயல்கள் உள்ளன. அவை காலத்தில் போக்கில் மூடிமறைக்கப்படும் என குற்றவாளிகள் நினைத்தால் அது சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை வீழுச்சியடையச் செய்வதாக அமையும். சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதாக இருந்தால் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நிதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பல்வேற சந்தர்ப்பங்களில் நாட்டில் நடந்துள்ள குற்றச் செயல்கள் அரசியல் மேடைகளில் அரசியல் கோசங்களாக பயன்படுத்தப்பட்டன.ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட தவறியுள்ளன.சர்ச்சைக்குரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை அம்பலப்படுத்துவோம். அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவோம். பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை நிலைநாட்டுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம். சட்டம் ,நியாயம் என்பன நிலைநாட்டப்படும் ஆட்சியொன்று எமக்கு அவசியம்.அதனை இந்த மக்கள் ஆணையிலாவது நிலைநாட்ட தவறினால் மீள அவ்வாறான ஆட்சிதொடர்பில் கனவு காண்பதில் எந்தப் பயனும் இல்லை.

இந்த மக்கள் ஆணையில் அந்த நோக்கம் உள்ளது. அந்த ஒப்பாரி உள்ளது. இந்த மக்கள் ஆணையில் தமது இறந்த தமது உறவினரின் வெளிப்பாடு உள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் நண்பர்களின் ஒப்பாரி இந்த மக்கள் ஆணையில் இருக்கிறது. அவர்களுக்கு நாம் நியாயத்தை நிலைநாட்டாவிட்டால் யார் நிறைவேற்றப் போகிறார்கள். யாருக்குப் பொறுப்புக் கொடுக்க முடியும்?

அவற்றை நிறைவேற்றாவிட்டால் நீதி,நியாயம் தொடர்பிலான கனவுகள் இந்த நாட்டில் மடிந்து போகும். கனவில் கூட நீதி,நியாயம் தொடர்பான எதிர்பார்ப்பு நாட்டுமக்கள் மத்தியில் ஏற்படும் என நினைக்கவில்லை. அதனால் நீதி,நியாயம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். குற்றங்கள் தொடர்பிலும் ஊழல் மோசடி தொடர்பிலும் சட்டத்தை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியையம் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையையும் மீள உறுதிப்படுத்துவோம். அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நாம் செய்யாவிட்டால் யார் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எம்முன் உள்ளது.

பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவோம்

இந்த ஆட்சி எமக்குக் கிடைத்த போது நாம் எதிர்க்கட்சி அரசியலில் ஈடுபட்டிருந்தோம். பொருளாதாரத்தின் ஆழத்தை நாம் அறிந்திருந்தோம். எமது பொருளாதாரம் பெரும் ஆழத்தில் பாரிய பரப்பில் சிக்கியிருக்கிறது. மிகச்சிறிய நூலொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரம் தான் எம்முன் உள்ளது. இந்தப் பொருளாதாரத்தினால் பாரிய அதிர்ச்சிகளை தாங்க முடியாது. இப்பொருளாதாரத்திற்கு பாரிய திருப்பங்கள் சரிவராது. அதனால் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் பொருளாதாத்துடன் தொடர்புள்ள குழுக்களின் நம்பிக்கை உறுதிப்படுத்துவது எமது எதிர்பார்ப்பாக இருந்தது. பொருளாதார நெருக்கடியின் அளவின் காரணமாக எமது சிறு தவறும் பாரிய விளைவை ஏற்படுத்தும். சிறு அதிர்ச்சியும் இந்த பொருளாதாரத்திற்கு ஒத்துவராது.எனவே இந்தப் பொருளாதாரத்தை வீழ இடமளிக்காத வகையில் சகல சந்தர்ப்பங்களிலும் அனைத்து முடிவுகளையும் சகல கோணங்களிலும் சிந்தித்து மிகவும் மென்மையாக எடுக்க வேண்டியுள்ளது.
எமக்கு தவறு செய்வதற்காக வாய்ப்பை இந்த பொருளாதாரம் வழங்கவில்லை.எனவே இந்தப் பொருளாதாரத்தை வழிநடத்துகையில் மென்மையான அனைத்து இடங்கள் குறித்தும் சிந்தித்து ஆராய்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும்.

அதன் படி நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டிய ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்துச் செல்ல முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம். அதன் படி பல செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். தற்போது மூன்றாவது மீளாய்வுக்கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டம்பர் மாதம்  ஆரம்பிக்கவேண்டியிருந்தது. மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த வாரத்திற்குள் பணியாளர் மட்ட ஒப்பந்ததில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியம் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அதில் முக்கியமாக முன்னெடுப்பாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டின் படி செயற்படுவோம்

கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் அடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல்பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது. கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை.அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் என நம்புகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும்.

நாம் கொள்கை ரீதியில் எமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்ச்சிநிரல் மாத்திரம் போதுமானது என கருதவில்லை.எமது நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இந்த செயற்பாடுகள் போதுமானதாக இருக்கும். ஆனால் எமது பொருளாதார முறைமை பாரிய சரிவை கண்டிருக்கிறது.

புதிய பொருளாதார மூலோபாயங்கள் 03

எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும் .எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல்மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பகுதி மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது.பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களளை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும்.

அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயனம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.

சந்தைப் போக்கை நிர்வகித்து பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக நியாயமான விலையில் வழங்குவோம்

சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப்படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும். இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானது. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.

அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும்.

அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம்.

சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் துரித அபிவிருத்தி

சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.

அமைவிடத்தின் பயனை பெற்று கப்பற்துறையை முன்னேற்ற நடவடிக்கை

இன்றும் உலக துறைமுகங்கள் கொழும்பு துறைமுகம் வரிசையில் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா

என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது.

விவசாயத்துறையில் புரட்சிகர முன்னேற்றம்

நாட்டில் மிகப்பெரிய விவசாய துறை இருந்தாலும் கடனாளிகளான விவசாயிகளே இன்று நாட்டில் இருக்கின்றனர். விவசாய துறைக்காக நாம் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறோம்.விவசாயத்துறை ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சுகாதாரம், கல்வி, இருப்பிடம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றமை பெரும் சமூக பிரச்சினையாகும். விவசாயத்துறை சார் வறுமை பாரிய சமூக அவலமாக மாறியுள்ளது. எனவே விவசாய துறையிலும் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக விதைஉற்பத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம். விவசாய சேவை நிலையங்களை வலுவூட்ட வேண்டும். இலங்கைக்குள் மாத்திரமின்றி ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வோம். விவசாயத்தை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக மாற்றியமைக்க வேண்டும்.

ஹெக்டயாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட பசளை நிவாரணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் நிவாணம் வழங்க வேண்டிய துறைகளுக்கு வழங்க இருக்கிறோம்.

அதேபோல் மீன்பிடித்துறையை பலப்படுத்த வேண்டும். எரிபொருள் பிரச்சினையால் படகுகள் கரைகளில் கிடந்தன.படகுகளை மீள கடலுக்கு அனுப்புவதற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதற்கான எமது நீரியல் வளங்களை பெறுமதிசேர் வளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம்.

தனியார் துறை உதவியுடன் கனிய வளத்தினால் உச்சபயன் பெற்று பெறுமதிசேர்க்க நடவடிக்கை

கனிய வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். தனியார் துறையினரையும் அந்த பணியில் கைகோர்த்துக்கொள்வோம். அது எமது பொருளாதாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறோம்.

அடுத்ததாக விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறை. உலகின் வளர்ச்சி கண்ட அனைத்து நாடுகளும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்விற்காக பெருமளவான நிதியை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகின்றன. புதிய உற்பத்தி மற்றும் விநியோகச் சேவைகளினால் மாத்திரமே புதிய சந்தை உருவாகும். எனவே விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலமும் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை செய்ய எதிர்பார்க்கிறோம். ஆசியாவில் பல நாடுகள் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது சார்ந்த புதிய சந்தையில் பங்காளராக நாம் தவறிவிட்டோம். சம்பிரதாய முறைகளிலே தொடர்ந்து இருக்கிறோம். அந்த துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்தத் துறையில் பாரிய முன்னெற்த்தை எட்ட எதிர்பார்க்கிறோம்.

டிஜிட்டல் மயமக்கல் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு பங்களிக்க ஹான்ஸ் விஜேசூரிய முன்வந்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதில் டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது. அந்த இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றும்..

அதன் படி நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டிய ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்துச் செல்ல முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம். அதன் படி பல செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். தற்போது மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இந்த வாரத்திற்குள் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அதில் முக்கியமாக முன்னெடுப்பாகும். கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் அடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது. கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை.அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.

வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் எனநம்புகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும்.

நாம் கொள்கை ரீதியில் எமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்ச்சிநிரல் மாத்திரம் போதுமானது என கருதவில்லை.எமது நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இந்த செயற்பாடுகள் போதுமானதாக இருக்கும். ஆனால் எமது பொருளாதார முறைமை பாரிய சரிவை கண்டிருக்கிறது. எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும் .எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல் மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பிரதேச மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது.பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும். அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயணம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.

சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப் படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும்.இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானதா. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.

அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும்.

அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம். சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.

இன்றும் உலக துறைமுகங்களின் வரிசையில் கொழும்பு துறைமுகம் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது.

நாட்டில் மிகப்பெரிய விவசாய துறை இருந்தாலும் கடனாளிகளான விவசாயிகளே இன்று நாட்டில் இருக்கின்றனர். விவசாய துறைக்காக நாம் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறோம்.விவசாயத்துறை ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சுகாதாரம், கல்வி, இருப்பிடம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றமை பாரிய சமூக பிரச்சினையாகும். விவசாயத்துறை சார் வறுமை பாரிய சமூக அவலமாக மாறியுள்ளது. எனவே விவசாய துறையிலும் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக விதைஉற்பத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம். விவசாய சேவை நிலையங்களை வலுவூட்ட வேண்டும். இலங்கைக்குள் மாத்திரமின்றி ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வோம். விவசாயத்தை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக மாற்றியமைக்க வேண்டும்.

ஹெக்டயாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட பசளை நிவாரணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் நிவாணம் வழங்க வேண்டிய துறைகளுக்கு வழங்க இருக்கிறோம்.

அதேபோல் மீன்பிடித்துறையை பலப்படுத்த வேண்டும். எரிபொருள் பிரச்சினையால் படகுகள் கரைகளில் கிடந்தன.படகுகளை மீள கடலுக்கு அனுப்புவதற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். தற்பொழுது அமைவ கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கான எமது நீரியல் வளங்களை பெறுமதிசேர் வளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம்.

கனிய வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். தனியார் துறையினரையும் அந்த பணியில் கைகோர்த்துக்கொள்வோம். அது எமது பொருளாதாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறோம்.

அடுத்ததாக விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறை. உலகின் வளர்ச்சி கண்ட அனைத்து நாடுகளும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்விற்காக பெருமளவான நிதியை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகின்றன. புதிய உற்பத்தி மற்றும் விநியோகச் சேவைகளினால் மாத்திரமே புதிய சந்தை உருவாகும். எனவே விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலமும் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். ஆசியாவில் பல நாடுகள் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது சார்ந்த புதிய சந்தையில் பங்காளராக நாம் தவறிவிட்டோம். சம்பிரதாய முறைகளிலே தொடர்ந்து இருக்கிறோம். அந்த துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்தத் துறையில் பாரிய முன்னெற்த்தை எட்ட எதிர்பார்க்கிறோம்.

டிஜிட்டல் மயமக்கல் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு பங்களிக்க ஹான்ஸ் விஜேசூரிய முன்வந்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதில் டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது. அந்த இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றும்..

அவரை அந்த அமைச்சின் செயலாளராகவும், ICT நிறுவனத்தின் தலைவராகவும், டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். இதை ஒரே இடத்தில் இருந்து இயக்க வேண்டும். பொருளாதாரத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டுச் செல்வதிலும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் டிஜிட்டல் மயமாக்கல் மிக முக்கியமானது.

எமது நாடு தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தப்பட வேண்டுமாயின், அந்த அந்த உயர் நிலை “டிஜிட்டல் ஸ்ரீலங்கா” ஆக அமைய வேண்டும். அதற்காக அரசாங்கம் முழுமையான அரப்பணிப்புடன் செயலாற்றும். அதன் வெற்றிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கிறது.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

அடுத்த பிரதான திட்டமா cleaning sri lanka வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். குறிப்பாக, தூய்மையான இலங்கை என்பது சுற்றுச்சூழல் அமைப்பை மட்டும் குறிக்கவில்லை. மக்கள் அரசியல் அதிகாரத்தில் சாதகமான மாற்றங்களை கொண்டு வர முடியும்.

அரசாங்க அதிகாரிகள் அமைப்பில் நல்ல மாற்றங்களைச் செய்யலாம். ஆனால் ஒரு நல்ல அரசை கட்டியெழுப்புவதற்கு மக்களிலும் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களில் ஒரு நல்ல மாற்றம் இல்லாமல், மேலே இருக்கும் அரசியல் அதிகாரத்தை மாற்றுவதால் மாத்திரம் இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது. அதனால்தான் நல்ல பிரஜைகள், நல்ல மனப்பான்மை, நல்ல செயல்பாடுகள் மற்றும் நல்ல நடத்தை கொண்ட மக்களை உருவாக்க வேண்டும்.

அதுவே தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் நோக்கங்களாக அமைகின்றது. குறிப்பாக இப்படி ஒரு தேசிய சபையில் விவாதிக்கக் கூடாத, பிரதேச சபை மட்டத்திலான பிரச்சினையாக இருந்தாலும், நம் நாட்டுப் பெண்கள் கழிப்பறைக்குச் செல்ல இந்த நாட்டில் சுத்தமான கழிப்பறை அமைப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியாகும், தூர இடங்களில் இருந்த கொழும்புக்கு வரும் சில பெண்கள் வீடு வரும் வரை தண்ணீர் அருந்துவதில்லை. சுத்தமான கழிப்பறை கட்டமைப்பொன்று இல்லாமையே அதற்கு காரணமாகும்.

கழிப்பறை கட்டமைப்பு கட்டப்பட்டாலும், சமூகத்தில் நல்ல மனப்பான்மை கட்டியெழுப்பப்படவில்லை. சாதாரண மக்களுக்கு பொது இடமாக அன்றி அவை அழிவுகரமான இடமாக மாறியுள்ளன. இதனால் என்ன தெரிகிறது? இது எமது நாட்டு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிடம் காணப்படுகின்ற அணுகுமுறையாகும். எனவே, தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் ஊடாக அவ்வாறான மனோபாவத்தையும் மாற்ற எதிர்பார்க்கின்றோம்.

சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக மாறுவது எவ்வாறு? இப்போது மட்டும் வாழ்ந்து களிப்பது எவ்வாறு இன்று சிந்திக்காமல் நம் எதிர்கால சந்ததியினருக்காக நம் நாட்டின் வளங்களை எவ்வாறு பாதுகாப்பது, சாரதி என்ற வகையில் நாம் எவ்வாறு வீதியில் வாகனத்தை செலுத்துவது?

நாம் எப்படி பாதைகளை கடப்பது? நாம் ஒரு இடத்தில் நுழையும் போது நாம் எப்படி மற்றவர்களை மரியாதையுடன் வரவேற்க முடியும்? இவ்வாறானதொரு சமூகத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது. ஒருவரை ஒருவர் பற்றி கவலைப்படாத சமூகம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமூகமே இன்று கட்டியெழுப்பட்டுள்ளது. ஒரு சிறிய சம்பவம் மோதலை நோக்கி நகர்த்தப்படுகிறது. பொறுமை இல்லை, மற்றவரை மன்னிக்கும் மனப்பாங்கு இல்லை. மற்றவரை இழிவாகப் பார்க்கும் சமூகம் என்று ஒட்டுமொத்த சமுதாயமும் வறண்ட சமுதாயமாக மாறியுள்ளது.

எனவே, இப்படியொரு சமுதாயத்திற்கு ஈரம் தேவை. வறண்ட முகங்கள், கடுமையான முகம் என்பவற்றோடு சமுதாயம் முன்னேற முடியுமா? புன்னகைக்கும் சமுதாயம் வேண்டும். பிறரை கருணையுடன் நடத்தும் சமுதாயம் வேண்டும். மனிதநேயப் பண்புகள் நிறைந்த சமுதாயம் தேவை. பிறர் துன்பத்தில் கருணை காட்டும் சமுதாயம் வேண்டும்.

குறிப்பாக, நமது நாட்டின் கல்வி, இலக்கியம், சட்டம், கலாச்சாரம் ஆகியவற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த சமூகத்தில் மிகவும் உயர்வான மற்றும் தரமான சமுதாயத்தை உருவாக்கும்.

வறுமையை ஒழிக்க பொருளாதார ஒத்துழைப்பு

வறுமை ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் நியாயமான உணவு வேளை, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, வாழும் வீடு, நல்ல வருமானம் மற்றும் மன சுதந்திரம் ஆகியவற்றை விரும்புகிறார்கள் அல்லவா? குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பது அரசின் முக்கிய பணியாக உள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பமாக தற்போது வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்படும். எதிர்வரும் பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும்.

அனைத்து பிரஜைகளையும் கவனிப்போம்

குழந்தைகளின் போஷாக்கு குறைபாடு எதிர்கால சமூகப் பேரழிவாக மாறக்கூடும். எனவே, பிள்ளைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டைக் போக்க அந்த வறிய குடும்பங்களுக்கு உதவிக் கொடுப்பனவுகளை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாக்க, போஷாக்குள்ள உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தற்போதைய வறுமையின் காரணமாக பெற முடியாத பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க தீர்மானித்திருக்கிறோம். ஆனால், நீண்டகாலமாக இதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது. எந்தவொரு நாட்டிலும் எந்த நேரத்திலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய மக்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் ஈடுபாடு இல்லாத மக்கள் சமூகமும் உள்ளது.

உலகின் வளர்ந்த நாடுகளிலும் இப்படிப்பட்ட சமூகம் இருக்கிறது. எனவே, அந்த சமூகத்தை எப்போதும் கவனித்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கைவிட மாட்டோம்.

இலங்கையில் அங்கவீனமானவர்கள் உள்ளனர். அங்கவீனமான குழந்தை உள்ள வீட்டில், அதுவே பிரச்சினையாக மாறுகிறது. அவர்களுக்கு சம்பிரதாய வாழ்வியல் முறை கிடைக்காமல் போகிறது. அந்த குழந்தையின் இயலாமையால் பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் முழு வாழ்க்கையும் அரப்பணிக்க வேண்டியிருக்கிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் நிலை இதுவாகவே இருக்கிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க விசேட செயன்முறை மற்றும் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எமது அரசாங்கம் அனைத்து மக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தும் அரசாங்கமாகும். மக்களை கைவிடாத அரசாங்கமாக மாற வேண்டும். இது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றுவோம்.

மேலும், எப்பொழுதும் நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் மட்டும் வறுமை ஒழியும் என்று நாங்கள் நம்பவில்லை. வறுமையை ஒழிக்க, பிரதிபலன்களை பெறக்கூடி பொருளாதார முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தற்போது, ​​வறுமையில் வாடும் பலரின் முக்கிய வருமான வழிமுறையாக விவசாயமே உள்ளது. விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்றாமல், வறுமையில் இருந்து மீட்க முடியாது.

மேலும், மீன்பிடி தொழிலை இலாபகரமான தொழிலாக மாற்றாமல் மீனவர்களை வறுமையில் இருந்து விடுவிக்க முடியாது. எனவே, அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார செயற்பாடுகளை வெற்றிகரமானதாகவும் இலாபகரமானதாகவும் மேம்படுத்துவதே எங்களது முதல் முயற்சியாகும். ஆனால் இந்த பொருளாதார மூலதனங்கள் மட்டும் ஒரு கிராமத்திற்கு போதுமானது அல்ல. புதிய பொருளாதார முறைமைகளும் வாய்ப்புகளும் கிராமங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

நமது சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக, சிறு, நடுத்தர தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, மூலதனம் மற்றும் சந்தையைக் கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நம் நாட்டில் சந்தை வாய்ப்புகள் போதுமானதாக இல்லை. நமது சந்தையில் 38 இலட்சம் என்ற தொகையே உள்ளனர். இது ஒரு சிறிய சந்தை. இந்த சிறிய சந்தையில் மட்டும் வியாபாரம் செய்து பொருளாதாரத்தில் தொழில் உரிமையாளர்கள் , தொழில்முனைவோர், வர்த்தகர்கள் என்று பலமான சமூக கட்டமைப்பை உருவாக்க முடியாது. எனவே இவர்கள் நாட்டுக்கு வௌியிலிருக்கும் சந்தை வாய்ப்புக்களை தேட வேண்டியது அவசியமாக உள்ளது.

தூதரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும்

அதன்படி, எங்கள் தூதரகத்தை முழுமையாக மறுசீரமைப்போம். இராஜதந்திர உறவுகள் தொடர்பில் எமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது. ஆனால் இந்த இலங்கை உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தையை தேடுவது தொடர்பிலான பொறுப்பு உள்ளது. அதற்காக எங்கள் தூதரகங்களை செயற்படுத்துவோம். நமது நாட்டில் மிகவும் தொழில்நுட்பத் திறன்களையும் ஆற்றலையும் கொண்ட ஒரு கட்டுமானத் தொழில் இருக்கிறது. இந்த கட்டுமானத் தொழிலை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்.

எங்களிடம் சில தனித்துவமான தயாரிப்புகள் உள்ளன. அந்தப் பொருட்களுக்கு அதிக மதிப்புகள் மற்றும் பெறுமதிகளை சேர்த்து புதிய தொழில்துறை கட்டமைப்பை உருவாக்கி அவற்றை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தாங்களாகவே முடிவெடுத்து செயல்படுபவர்கள் அல்ல. அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர துறையின் வளர்ச்சியை நாம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரித்துள்ளோம்.

மார்ச் மாதத்தில் புதிய வரவு செலவுத் திட்டம்

அது பற்றிய விடயங்களை “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற விஞ்ஞாபனத்தில் சேர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்தில் தமது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை எமது அமைச்சர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

விரைவில் பட்ஜெட்டை சமர்ப்பிக்க முடியாதுள்ளது. அடுத்த 04 மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்காக டிசம்பர் மாத தொடக்கத்தில் இடைக்கால கணக்கு அறிக்கையொன்றை சமர்பிப்போம். பெப்ரவரி மாத தொடக்கத்தில் பட்ஜெடை சமர்ப்பித்து, மார்ச் மாதத்தில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

எனவே, இந்த திட்டத்தை நடைமுறை ரீதியான பட்ஜெடில் இணைத்துள்ளோம். தற்போது கருத்தியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளின் அடிப்படையில், வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரித்து, மார்ச் மாத நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்.

புதிய யுகத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்

நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மாற்றத்தின் புதிய யுகம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய யுகத்தின் வெற்றிக்கு இந்த பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றியிருக்கலாம். நாம் எதிர்மறையான கொள்கைகள் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் மற்றும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் இன்று நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கு செல்ல ஒன்றுபட்டுள்ளோம்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சிறந்த நாட்டை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த பொறுப்புக்கு நானும் எங்கள் அரசும் கட்டுப்பட்டுள்ளோம். இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும், எம்.பி.க்களும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, மார்ட்டின் லூதர் கிங் ஒருமுறை சொன்னார், “இருளை இருளால் விரட்ட முடியாது. ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பால் வெறுப்பை ஒழிக்க முடியாது. அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

நன்றி

இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Previous Post

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

Next Post

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்

Related Posts

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்
இலங்கை செய்திகள்

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

December 23, 2024
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு
இலங்கை செய்திகள்

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

December 23, 2024
கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்
இலங்கை செய்திகள்

கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்

December 23, 2024
சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டிய ராஜபக்சர்களின் குற்றங்கள்! அநுரவுக்கு சவால்
அரசியல் செய்திகள்

சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டிய ராஜபக்சர்களின் குற்றங்கள்! அநுரவுக்கு சவால்

December 23, 2024
மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய சர்வதேச நிறுவன வழிமுறைகள்
இலங்கை செய்திகள்

மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய சர்வதேச நிறுவன வழிமுறைகள்

December 12, 2024
பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.
அரசியல் செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

December 12, 2024
Next Post
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Yarlpana Matrimony Yarlpana Matrimony Yarlpana Matrimony

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

November 11, 2024
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

November 11, 2024
மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

November 9, 2024
Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் – இலகுவான குறிப்புகள்

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் – இலகுவான குறிப்புகள்

November 9, 2024
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 தொடர்- இலங்கை அணி அபார வெற்றி..!

0
மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

0
Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் – இலகுவான குறிப்புகள்

Bigg Boss சௌந்தர்யாவின் அழகு இரகசியம் இது தான் – இலகுவான குறிப்புகள்

0
பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா

பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா

December 23, 2024
மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள்

December 23, 2024
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு

December 23, 2024
கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்

கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்

December 23, 2024

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

About

முதல் குரல் ஆனது உலக தமிழ் மக்களுக்கான செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம்.

Important Links

  • பிரதான செய்திகள்
  • இலங்கை செய்திகள்
  • அபிவிருத்தி செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா செய்திகள்
  • ஊர் செய்திகள்
  • வணிக செய்திகள்
  • விளையாட்டு செய்திகள்
  • கோயில்கள்

Recent Posts

  • பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா December 23, 2024
  • மனோ கணேசன் தரப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பிரதான பதவிகள் December 23, 2024
  • கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டு December 23, 2024
  • கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள் December 23, 2024
  • விளம்பரங்கள்
  • துயர் பகிர்வு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • விளம்பரங்கள்
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.