நடிகர்கள் நாக சைதன்யா – சோபிதா திருமணம் வரும் டிசம்பர் 4-ம் திகதி நடைபெற இருக்கிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8-ம் திகதி நடைபெற்றது. இதனை புகைப்படங்களுடன் நாகார்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவருக்குமான திருமண திகதி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. தற்போது நாக சைதன்யா – சோபிதா திருமணம் டிசம்பர் 4-ம் திகதி நடைபெறவுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வைத்து மிக பிரம்மாண்டமாக இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக பத்திரிகை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் இருந்து பத்திரிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. திருமண பத்திரிக்கை உடன் இனிப்புகள், உடைகள் என பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் திருமணத்தைத் தொடர்ந்து நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது.