பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு சில பெண்கள் அதை சீராக செய்துக்கொள்வதில்லை. குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் சினிமா நடிகைகள் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அந்தவகையில் தற்போது பிக் பாஸ் மூலம் பிரபலமாகி வரும் சௌந்தர்யாவின் அழகு குறிப்புகள் தெரியவந்துள்ளன. அது குறித்து தற்போது இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Bigg Boss சௌந்தர்யா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது Bigg Boss 8 தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகரன், சச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா SK, தீபக், RJ ஆனந்தி, சுனிதா கோகோய், VJ விஷால், Jeffry, ரஞ்சித், முத்துக்குமரன், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், சௌந்தரியா நஞ்சுண்டன், அருண் பிரசாத், ஆர்ணவ் மற்றும் அன்ஷிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில பெண் போட்டியாளர்கள் பிரபலமாகுவார்கள். அந்தவகையில் இந்த சீசனில் சௌந்தர்யா மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் எனலாம்.
ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்கள் சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் சண்மை சர்ச்சை எதற்கும் போகாமல் இருந்த இடம் தெரியாமல் அமைதியாக இருந்து தங்களது ஆட்டத்தை தொடர்வார்கள். அதில் ஒருவர் தான் இவரும்.
அந்தவகையில் தற்போது பிக் பாஸ் சௌந்தர்யாவின் அழகின் இரகசியம் குறித்து பார்க்கலாம்.
அழகு இரகசியம் என்ன?
பிக் பாஸ் சௌதர்யா இரண்டு வருடங்களுக்கு முன் முகப்பரு மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாராம். அது தொடர்பில் அவர் வைத்தியரை சந்தித்து பல சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளார்.
ஆனால் அப்படி செய்ததன் மூலம் பணம் மட்டும் தான் வீணாகியதாக ஒர் நேர்காணலில் கூறியுள்ளார்.
பின் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஏதாவது செய்து முகத்தில் உள்ள பருக்களை குறைக்கலாம் என முடிவு செய்துள்ளார். அதையடுத்து கடலை மா, தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசிக்கொள்வாராம்.
மேலும் அவர் ABC ஜூஸ் குடிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். இதை வாரம் மூன்று முறையாவது கட்டாயம் எடுத்துக்கொள்வாராம். இதன் மூலம் முகத்தில் ஓர் பொலிவு வருவதாக அவர் கூறியுள்ளார்.