முக்கியமான எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாது தவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிய்வில் உள்ள எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மாத்திரமான உக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்த எரிசக்தி கட்டமைப்புக்கு எதிரான 11 ஆவது பெரிய அளவிலான தாக்குதல் இதுவாகும்.
இத்தாக்குதலால் நாடு தழுவிய மின்வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் உக்ரேனின் எல்விவ், வோலின் மற்றும் ரிவ்னேவின் மேற்குப் பகுதிகளில் பெரிய மின்தடையும் ஏற்பட்டுள்ளது.