நாட்டின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 225 உறுப்பினர்களில் 18 மருத்துவர்கள் உள்ளடங்குகின்றனர்.
இவர்களில் 16 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
மருத்துவர்கள் fshd மொஹமட் ரிஸ்வி சாலி, கிறிசாந்த சில்வா அபேசேன, நிஹால் அபேசிங்க,நளிந்த ஜயதிஸ்ஸ, நிசாந்த சமரவீர சாலிய சதருவன், ரணசிங்க, ஜகத் விக்கிரமரத்ன, ஜனக சேனாரத்ன, நாமல் சுதர்ஷன, நிஷாந்த ஜகத் குமார, முதித விஜயமுனி, பிரசன்ன குணசேன, மதுர செனவிரத்ன,பி.எச் தம்மிக, ஸ்ரீ பவனந்த ராஜா ஆகியோர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மருத்துவர் இளையதம்பி ஸ்ரீநாத், சுயேட்சை குழு சார்பில் போட்டியிட்ட மருத்துவர் இராமநாதன் அச்சுனா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.