பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), அவர்கள் 2024 நவம்பர் 27 அன்று மன்னாரில் நிலவும் சீரற்ற காலநிலையை அவதானிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் மாநாடு ஒன்று மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடற்படைத் தளபதி, வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, யாழ். சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர், வடமத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி, அரச அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்காக இராணுவப் படையினரை அனுப்புதல் மற்றும் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற முக்கியமான செயல்பாட்டு விடயங்கள் குறித்து மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக நிறுவப்பட்ட உள்ளக இடம்பெயர்வு மையங்களில் இராணுவத் தளபதி ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வில் புனித அன்னை தெரசா பள்ளி, சிவ நகர் கோவில், தாழ்வுபாடு தேவாலயம் ஆகிய இடங்களில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி இடம்பெயர்ந்தோர் மையங்களின் நிலைமைகளை மதிப்பீடு செய்ததுடன், தேவைப்படுபவர்களுக்கு போதுமான வளங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்