பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கும் வகையில் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பக்கவாதம்
பக்கவாதத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயில் இருந்து விடுபட்டாலும், அதன் தாக்கம் காரணமாக,
3ல் ஒரு பங்கு பேர் செயல்பட முடியாமல் நிரந்தர இயலாமையை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தென்கொரியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்கள் நடந்து செல்ல ஏதுவாக ரோபோ தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
ரோபோ தொழில்நுட்பம்
இந்த ரோபோ கவசத்தை உடலின் முன் பகுதியில் மாட்டிக் கொள்ள வேண்டும். சக்கர நாற்காலியில் இருந்தவாறே கால்களை மெல்ல நகர்த்தி, ரோபோவின் கால் பகுதி உள்ளே பொருத்திக் கொள்ள வேண்டும். பின் நெஞ்சு பகுதியை முன்னோக்கி உந்தினால் போதும்.
அந்த ரோபோ பாதிக்கப்பட்டவரை அப்படியே இழுத்து மெதுவாக நடக்க வைத்துவிடும். இதற்கு யாருடைய தயவும், காத்திருப்பு என்பதும் தேவையில்லை. தற்போது இந்த ரோபோ மிக பெரும் பயனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.