மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான வட பிராந்தியத்தின் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் விசேட நிகழ்வு அண்மையில் (10) அனுராதபுர மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது பசுமையான புகையிரத நிலையத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக புகையிரதப் நிலையப் பொறுப்பதிகாரி பி. எஸ். பொல்வத்தகேயினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பணிப்பாளர் மற்றும் தெளிவுபடுத்தும் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் எம் சிவக்குமார், சுற்றாடல் முன்னேற்ற பிரிவின் பணிப்பாளர் ஷ்யாமணி பெரியப்பெரும, வட மத்திய மாகாண அலுவலகத்தின் பணிப்பாளர் உட்பட இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் வட பிராந்தியப் புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.