பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரை முன்மொழிந்தார். அதனை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆமோதித்தார்.
புதிய சபாநாயகருக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி சேனாதீர, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 
			 
                                







 
							










 
							 
							