சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் இந்த நாட்களில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காய்கறி மொத்த விலை உயர்வால், காய்கறி விற்பனையாளர்களும், இடைத்தரகர்களும், மொத்த விலையை விட, சில்லரை விலையை, இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்தியுள்ளனர்.


















