புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் அச்சந்தர்ப்பத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
			 
                                







 
							










 
							 
							