இலங்கையில் அதிகரித்து வரும் தொழு நோயாளர்கள் தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியமாக காணப்படுவதோடு,
இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிக அளவில் செயல்பட்டு வரும் காவேரி கலா மன்றத்தின் செயற்பாடுகளும் சிறப்பாக அமைந்துள்ளதாக,
தொழு நோயாளர்கள் தொடர்பில் பணியாற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை,
அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.
இந்த வகையில் தொழு நோயாளர்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோய் அறிகுறிகள் தொடர்பில்,
மக்களுக்கு வெளிப்படுத்தவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறான சூழலில் பலர் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மையால் நோயின் தாக்கம் அதிகரித்ததன்,
பின்னர் வைத்தியசாலைகளை நாடிச் செல்ல வேண்டிய துப்பாக்கிய நிலைமை காணப்படுகிறது.
கிராம மட்டங்களில் இருந்து நகர் பகுதி வரை தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இவ்விடத்தில் பல்வேறு அரசு சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றது.
எனினும் காவிரி கலா மன்றத்தின் செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காலத்திற்கு காலம் மீளாய்வுக்கு,
உட்படுத்தப்பட்டு நோயாளர்கள் தொடர்பான கண்காணிப்புகளும் இடம்பெற்று வருகின்றமை சிறப்பாக அமைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.