இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் வீதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பஸ்சில் இருந்த சாரதி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன பலரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே, இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.