அரசாங்கம் நெல் உற்பத்திக்கு வழங்கும் நிவாரணத்தை நுகர்வோருக்கும் கிடைக்கப் பெறச் செய்வது அவசியம் என வர்த்தக, வாணிபத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களை அழுத்தத்திற்கு உட்படுத்தாதிருப்பதற்காக அரசாங்கம் அவசியமான சந்தர்ப்பங்களில் குறுங்கால மற்றும் நீண்ட கால கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதாக அமைச்சர் விபரித்தார்.
தற்போதும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்