அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் பிற வணிக நிர்வாகிகள் மீது பல மில்லியன் டொலர் இலஞ்சம் மற்றும் மோசடி திட்டத்தில்,
ஈடுபட்டதாக நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
CNN அறிக்கையின்படி, கௌதம் அதானி மற்றும் ஏழு மூத்த வணிக நிர்வாகிகள் சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக,
இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
இந்த ஒப்பந்தங்கள் சுமார் 20 ஆண்டு காலத்தில் வரிக்குப் பிறகு 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதானி குழுமமோ அல்லது பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களோ அல்லது வொஷிங்டனில் உள்ள இந்திய தூதரகமோ,
இதுவரை குற்றப்பத்திரிகை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதானி உட்பட இந்த வழக்கில் பிரதிவாதிகள் எவரும் தற்போது கைது செய்யப்படவில்லை.
ஆனால் ஒரு நீதிபதி கைது பிடியாணை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்,
அதை வழக்கறிஞர்கள் வெளிநாட்டு சட்ட அமலாக்கத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.