இஸ்ரேல் லெபனான் தலைநகரில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலில் முகமட் அபீவ் கொல்லப்பட்டுள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.
மக்கள் நெரிசலாக வாழும் ரஸ் அல் நபா பகுதியில் பாத் அரசியல் கட்சியின் தலைமையகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதை லெபனானின் சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
கொல்லப்பட்ட ஊடக பிரிவு தலைவர் கடந்த திங்கட்கிழமை பெய்ரூட்டில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.
இந்த தாக்குதலில் சிரியாவின் பாத் கட்சியின் லெபனான் கிளையின் அலுவலகம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன